தேசிய விருதுக்கான பட்டியலில் பிரபல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
67 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் “அசுரன்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.