Categories
சினிமா

“கவினுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா”…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்திற்கு பிறகு ஓ‌ மணப்பெண்ணே, பியார் பிரேமா காதல், இல்பர்ட் ராணியும் இஸ்பெட் ராஜாவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஹரிஷ் கல்யாண் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஹரிஷ் கல்யாண்  நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய  திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. ‌ இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கவின் மற்றும் நர்மதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதோடு கவின் மற்றும் லாஸ்லியாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கிய கவின் மற்றும் லாஸ்லியா தீவிரமாக காதலித்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்‌. இந்த பிரிவுக்கு பிறகு கவின் மற்றும் லாஸ்லியா முதன்முறையாக ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |