துபாயில் பயங்கரமாக வீசிய புழுதிப் புயலில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் புழுதிப்புயல் வீசியது. இதில் 828 மீட்டர் உயரமுடைய புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தையே மறைக்கக்கூடிய அளவிற்கு கடுமையாக புழுதி புயல் வீசியிருக்கிறது. சமீப நாட்களாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உட்பட பல நாடுகளில் கடும் புழுதி புயல் வீசியிருக்கிறது.
இந்த மணல் புயலால், பள்ளிகளும், விமான நிலையங்களும் அடைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான மக்கள் சுவாசக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழுதிப்புயல், அதிகமான காற்று மற்றும் தூசியை ஏற்படுத்துவதால், பார்வை குறைவு உண்டாகும். எனவே வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமீரகத்தின் தலைநகரான அபுதாபி காவல்துறை தெரிவித்திருக்கிறது.