மே மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிரிப்பின் மேன்மை உணர்த்துவதற்காக இந்த நாள் பின்பற்றப்படுகிறது. சிரிப்பு மனிதனின் உன்னதமான நாகரீக அடையாளமாகும். சிரித்த முகமே உபசரிப்பில் முதல் படியாகும். உறவை வளர்க்கும், நீண்டகாலம் உறவைத் தொடர வைக்கும், மனிதர்களின் குழந்தைகள்தான் அதிகமாக சிரிக்கிறார்கள்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 13 முறை சிரிக்கிறான். போலியான சிரிப்பை மூளை எளிதாக கண்டுபிடித்துவிடும். சிரிப்பை பற்றிய படிப்புக்கு ஜெலடோலஜி என்ற பெயர். சிரிப்பு உடலில் தேவையில்லாத கலோரிகளை எரிக்க துணை செய்கிறது. மிகச்சிறந்த உடற்பயிற்சியும் கூட. தினமும் 15 நிமிடம் சிரிப்பு ஆயுளில் இரண்டு நாட்களே அதிகப்படுத்தும். சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்