“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது மருத்துவர்களின் ஒப்புக் கொண்ட ஒன்று. சிரிப்பை போற்றும் வகையில் உலக சிரிப்பு தினம் மே முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த மருத்துவர் மதன் கட்டாரிய முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு உலக சிரிப்பு தினம் கடைபிடிப்பதை தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 300 முதல் 400 முறைகள் சாதாரணமாகச் சிரிப்பதாகவும் ஆனால் வயது கூடக்கூட எண்ணிக்கை குறைவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மன அழுத்தம், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்க சிரிப்பு வழிவகுப்பதாக தெரிவிக்கின்றனர். லாஃர் தெராபி மூலம் மனசோர்வு குறைவதாகவும் நாள் முழுவதும் மகிழ்ச்சியை உணர முடிவதாகவும் கூறுகின்றனர்.
நாமும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துவிட இந்த நாள் உறுதி ஏற்போம். மற்ற உயிர்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவது சிரிப்பு மட்டுமே எனவே துன்பம் வரும்போது சிரிப்போம் சிரித்துக் கொண்டே இருப்போம்.