Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப காலம் கடத்திட்டாங்க… 1 1/2 லட்சம் திருட்டு… 2 1/2 வருஷத்திற்கு பிறகு வழக்கு…!!

1 1/2 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அவரது மோட்டார் சைக்கிளை சுண்ணாம்புக்கல் தெருவில் நிறுத்திவிட்டு மழைக்கோட்டு வாங்க கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து உடனடியாக பரமக்குடி நகர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் காலம் கடத்தி உள்ளனர். இதனால் கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுகுறித்து தொடர்ந்து மனு அளித்துள்ளார். இதனை அடுத்து பரமக்குடி நகர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உடனடியாக இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து பரமக்குடி நகர் போலீசார் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |