Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லட்சக்கணக்கில் சூறையாடிய கொள்கையாளர்கள்…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம், 6 சவரன் தங்க நகைகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |