செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு மிகவும் தாமதமாக கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் முதலிலே அமைச்சராக ஆக்கி இருக்க வேண்டியவர். ஏனென்றால் போன தேர்தலில் அந்த அளவிற்கு பணியாற்றியவர், இளைஞர்கள் இடையே, மாணவர்கள் இடையே எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று துடிதுடிப்போடு செயல்படுகின்ற ஒருவர்தான் உதயநிதி.
உதயநிதிக்கு இதுவே ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக கொடுக்கப்படுகின்ற பதவி என்று தான் நான் கருதுகிறேன். உதயநிதி மிகத் திறமை பெற்ற ஒரு இளைஞர். அவரை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும், எல்லா துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். அது திரைத்துறையில் இருந்தாலும் சரி, அரசியல் துறையில் இருந்தாலும் சரி, ஆனால் இப்போது ஏன் முதலமைச்சர் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார் என்றால், அவர் சட்டமன்ற உறுப்பினராக சிறிது காலம் பயிற்சி பெறட்டும் என்று நினைத்து,
ஒன்றரை வருடம் கழித்து இப்போது அமைச்சராக்கி இருக்கிறார். ஆனால் அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருந்தாலும் அவர் தமிழகத்தினுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்ப்பட்டு இருப்பார். தமிழக முதல்வர் சொல்லுகின்ற திராவிடம் மாடல் ஆட்சியை நடத்துகின்ற ஒரு இளைஞராக நம்முடைய இளைஞர் அணி செயலாளராகவும், கழகத்தில் அவர் கண்டிப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இன்னும் வருங்காலங்களில் மிகப் பெரிய பொறுப்புகளை எல்லாம் ஏற்று செயல்படுவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என தெரிவித்தார்.