Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை எடுத்து சென்றதால்…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் அருகில் பள்ளி மாணவி லாரியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சு. பள்ளிப்பட்டு மின்நகர் பகுதியில் தண்டபாணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்தார். இவருடைய மகள் அட்சயா கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அட்சயா தன் தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி போக்குவரத்து சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக எதிரே அட்சயா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டது. இதனால் கீழே விழுந்த அட்சயா லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |