Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதல்…. லாரி ஓட்டுநர் பலியான சோகம் ….போலீசார் விசாரணை….!!!

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவண்ணாமலை மாவட்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம்  மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணியில் உள்ள நுகர்வோர் வாணிப கழக குடோனில்  மூட்டைகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது  களம்பூரை  அடுத்துள்ள கீழ்ப்பட்டு ஏரி பகுதி அருகே லாரி சென்றுகொண்டிருக்கும் போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பேருந்தும், பூபாலன் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் ஓட்டுநர் பூபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்த 15 பேரில் நார்த்தாம்பூண்டி சேர்ந்த சங்கர், முருகன் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு  கடம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர்ந்து இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |