Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விவசாயிக்கு ஆலோசனை…. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி…. கடலூரில் பரபரப்பு….!!

விவசாயிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள நண்டுக்குழி வடக்குத் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இதை கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்துள்ளார். அதன்பின் பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்கு ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரியான செண்பகவல்லியை அணுகியுள்ளார்.

அப்போது செண்பகவள்ளி பட்டா மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிக்க வேண்டும் எனவும் அதை தரவில்லை என்றால் பட்டாவை மாற்றித் தர மாட்டேன் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். இதற்கு ஹரிகிருஷ்ணன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதால் அதிகாரி 2000 ரூபாய் குறைத்து எட்டாயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய 8000 ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனை படி விவசாயி பணத்தை அதிகாரியிடம் கொண்டு சென்று கொடுத்துள்ளனர். அவ்வாறு கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செண்பகவல்லியை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்த போது கணக்கில் வராத 12 1/2 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. மேலும் அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |