இந்தோனேசியாவில் பெய்த கனமழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவில் மாட்டி, 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். அங்கு மழை காலங்களில் வழக்கமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது.
இந்நிலையில், பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மாட்டிக்கொண்டது. சகதி மற்றும் சேறுகள் வீடுகளை சூழ்ந்து கொண்டது. இதில் நான்கு நபர்கள் பலியானதாகவும், ஒரு நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் கழகம் தகவல் தெரிவித்திருக்கிறது.