தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எனது நிலத்தை தந்தை பெயரில் வாங்கி இருந்தேன். இதை கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதையடுத்து துறையூர் புகார் நிலையில் காவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் துறையூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மாவட்ட குற்றவியல் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுபோன்று தனிநபர்கள் மற்றவர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் பெயருக்கு மாற்றி பதிவு செய்து கொள்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டது. நில அபகரிப்பு என்பது தமிழகத்தில் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது தான் நில அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்த நிலத்தை காப்பாற்ற முடியும்.
இந்த மனுவை கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரணை செய்தபோது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் உள்ளதுபோல நில அபகரிப்பு சட்டம் தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். தரிசு நிலங்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கு வெள்ளை சட்டை அணிந்து கட்சி கொடியை ஊன்றி நிலத்தை பட்டா போட்டு விடுகின்றனர். எனவே நீதிமன்றம், பொதுமக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுடன், உங்க வளர்ப்பு பற்றி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 16ஆம் தேதி ஒத்திவைத்தனர்.