உலக அளவில் பிரபலமான லம்போர்கினி காரின் ஆரம்ப விலை 3 கோடி ஆகும். இந்த காரின் தோற்றமும் வடிவமைப்பும் இளம் தலைமுறையினரை சிறுவர்களையும் அதிகம் ஈர்க்க கூடியதாக இருக்கும். அந்த வகையில் சேம்பர் என்கிற சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே எதையாவது உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. தன்னுடைய அப்பா வாங்கி கொடுத்த வீடியோ கேமில் லம்போர்கினி கார் ஓட்டுற நாம் எதற்காக அதனை தயாரிக்கக் கூடாது என்று தன் அப்பாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவனின் தந்தையும் ஒத்துழைப்பு கொடுத்து சிறுவனுடன் சேர்ந்து லம்போகினி காரை தயாரிக்க தொடங்கினார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு இவர்கள் உழைத்தார்கள். அனைவரும் இவர்களை பார்த்து கேலி கிண்டல் செய்தனர். ஆனால் எதையும் பற்றி இவர்கள் இருவரும் கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார்கள்.
இந்த நிலையில் 30 சதவீத வேலை முடிந்த பின் திடீரென்று சிறுவனின் தந்தைக்கு லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து போன் வந்தது. அதில் அவர்கள் கூறியதாவது “உங்களுடைய கடின உழைப்பை பார்த்து நாங்கள் வியந்து போனோம். இதனை ஊக்குவிப்பதற்காக எங்களுடைய நிறுவனத்தில் இருக்கும் லம்போர்கினி காரை உங்களுக்கு பரிசாக அளிக்கிறோம்” என்று கூறியுள்ளனர். பின்னர் இரவோடு இரவாக சிறுவனின் தந்தையிடம் சொல்லி கேரேஜில் இருக்கும் பழைய காரை மாற்றி லம்போர்கினி காரை வைத்தார்கள். இதனையடுத்து வழக்கம்போல் மறுநாள் காலை கேரேஜை திறந்து பார்த்த சிறுவனுக்கு உண்மையான லம்போர்கினி கார் உள்ளே இருப்பதை பார்த்து வியந்து மெய்சிலிர்த்து போனான்.