செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக… மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார்.
2019 நாடாளுமன்ற தேர்தல், அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல், அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல், பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும்…
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்தினை முன்னெடுத்து, இயக்கத்தினுடைய வெற்றிக்கு தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து, ஒரு மகத்தான வெற்றியை கழகத்தினுடைய தலைவர்கள் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் இயக்கத்திற்கு உறுதுணையாக பணியாற்றி இருக்கின்றார். எனவே அவர் அமைச்சரான இந்த நாள் சிறப்பு வாய்ந்த நாள். குறிப்பாக இந்த டிசம்பர் 14 என்பது எங்களுடைய இளைஞரணி செயலாளர்கள் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களுக்கு…
லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு… ஒரு மகிழ்ச்சியான நாள், திருநாள். இந்த திருநாளில் அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணன் திரு.உதயநிதி அவர்களுக்கு… மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு… கரூர் – கோவை மாவட்ட மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த நேரத்தில் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.