Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கூர்மையான பார்வைக்கு…. இதை சாப்பாட்டில் சேர்த்துக்கோங்க…!!

காய்கறிகளில் கொழகொழப்பு தன்மையினால் மக்களால் வெறுக்கப்படும் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் சாப்பிடுவதனால் அறிவுத்திறன் வளரும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கூறி வருவர். அதையும் தாண்டி வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு

  • வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் அதிலிருக்கும் நார்ச்சத்து அல்சர் நோய்க்கு மருந்தாகவும் அதுதவிர வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றது.
  • வெண்டைக்காயில் இருக்கும் கரையும் நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • வைட்டமின் சி நிறைந்த வெண்டைக்காய் ஆஸ்துமா நோயின் அதிகப்படியான தீவிரத்தை குறைக்க வல்லது.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வெண்டைக்காய் துணைபுரிகிறது..
  • உணவில் அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல் சளி பிரச்சினைகள் வராமல் தடுக்கின்றது.
  • வெண்டைக்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் பார்வைத் திறனை கூர்மையாக்கி உதவி புரிகிறது.

Categories

Tech |