குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தாய்-குழந்தை இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.