இங்கிலாந்தில் ஒரு பெண் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியாவில் இருக்கும் நோர்ஃபோக் மாகாணத்தில் வசிக்கும் லூ காக்கர்(48) என்ற பெண் வித்தியாசமான பொழுதுபோக்கை கொண்டிருக்கிறார். அதாவது அந்த மாகாணத்திலுள்ள கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை புகைப்படமெடுத்து வருகிறார்.
இவர், நோர்ஃபோக் மாகாணத்தை சுற்றி அமைந்துள்ள 200க்கும் அதிகமான கல்லறைகளையும் தேவாலய பகுதிகளிலும் தற்போது வரை 2,20,000 கல்லறைகளையும் நினைவுச்சின்னங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் தன் பணி கடினமாக இருப்பதாக கூறுகிறார்.
இவரது புகைப்பட தொகுப்பில் கல்லறை புகைப்படங்கள் 1,600 இருக்கிறது. மேலும் இவரும் இவரின் தாயும் சேர்ந்து பழைய கல்லறைகளை சுத்தம் செய்து, அதன்பின்பே புகைப்படம் எடுக்கின்றனர். இவர் சுமார் பத்து வருடங்களாக புகைப்படம் எடுத்து வருகிறார். தன் புகைப்படங்கள் மூலம் எதிர்கால சந்ததியினர் தங்கள் குடும்பங்களை கண்டறிய முடியும் என்கிறார்.
மேலும் அவர்கள் தங்களது பாரம்பரியம் மற்றும் முன்னோர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். என்றும் சுமார் 12 வருடங்களுக்கு முன்பாக தன் குடும்பத்தைப் பற்றிய வரலாற்றை அறிய தொடங்கியபோது இந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்