யானை மிதித்துக் கொன்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக வனத்துறையினர் 4 லட்ச ரூபாயை வழங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பூங்கொடியை மிதித்து கொன்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகு பிரேதப் பரிசோதனை செய்த பூங்கொடியின் உடலானது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் பூங்கொடியின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயை நிவாரண தொகையாக வழங்கி உள்ளனர்.