Categories
தேசிய செய்திகள்

ரூ.1,500-ம் ரூ.300-ம் ரூ.1,800 இல்ல…. பெண்ணின் வாக்குவாதம்… வைரலாகும் காணொளி…!!

பெண் ஒருவர் தான் வேலை பார்த்ததுக்கு சம்பளம் வாங்குவதற்கு வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணொருவர் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் இளைஞர்களிடம் ஊதியம் குறித்து வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர்கள் தாங்கள் ஊதியத்தை கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் எனக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறுகிறார். அதற்கு இளைஞர் விளக்கம் அளிக்கும் விதமாக மூன்று 500 ரூபாய் நோட்டுகளும், ஒரு 200 ரூபாய் நோட்டும், ஒரு 100 ரூபாய் நோட்டும் வழங்கியதாக கூறுகிறார்.

அதற்கு அந்தப் பெண் எனக்கு 1,500 ரூபாயும் 300 ரூபாயும் கொடுத்தீர்கள். ஆனால் நீங்கள் எனக்கு தரவேண்டிய சம்பளம் 1800 ரூபாய். இதுவரை அதை நீங்கள் கொடுக்கவில்லை என கூறுகிறார். இளைஞர் மீண்டும் 1,500 ரூபாய் 300 ரூபாயும் சேர்ந்தால் 1,800 ரூபாய் எனக் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணோ 300 ரூபாயும் 1,500 ரூபாயும் 1800 ரூபாய் இல்லை என திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் நகைச்சுவை காணொளியாக மாற்றி திரைப்பட காட்சிகளுடன் அதனை ஒப்பிட்டுள்ளனர்.

இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், “நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் அந்தப் பெண்ணை மதிக்க வேண்டியது அவசியம். கணக்கை தவறாக கூறுவது நகைச்சுவை இல்லை” என கண்டிப்புடன் இணைய வாசகர்களுக்கு பதிலளித்துள்ளார். அதோடு “பொருளாதாரம் குறித்த அறிவை வளர்ப்பதற்கு நிகழ்ச்சி ஒன்று பெண்கள் பொருளாதார மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடத்தப்படுகின்றது. இந்த காணொளி நமக்கு ஒரு சவால் எனவே நடக்கும் நிகழ்ச்சியை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |