Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கழுத்தில் ஆபிரேஷன் நடந்துருக்கு… என்னால வலி தாங்க முடில… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு …!!

அரக்கோணம் அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனோகரனின் மூன்றாவது மகள் வேனிஷா என்பவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் வீட்டில் இருந்துவிட்டார்,. இவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து அதன் வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் மன உளைச்சல் காரணமாக வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு விட்டார்.

அதன்பின் சுயநினைவின்றி இருந்த வேனிஷாவை, அவரது குடும்பத்தினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |