Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளோட வாழ்க்கை போச்சு… சண்டை போட்டு கொண்ட பெற்றோர்… தாய் எடுத்த முடிவு…!!

மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த அகிலா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அகிலாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |