Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களே..! 40 நிமிடம் பேசுனேன்… முழுமையாக கேளுங்கள் …! திருமா வேண்டுகோள் …!!

100ஆண்டுகளுக்கு பின்பும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெண்களை பற்றி இழிவாக திருமாவளவன் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு திருமாவளவன் பேசியது திட்டமிட்டு தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகின்றது. அவர் மனுநூலில் உள்ளதையே பேசினார் என திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். இதனிடையே பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசினார் திருமாவளவன்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெரியாரிய உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து இணையவெளி கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்கள். பெரியார் மற்றும் இந்திய அரசியல் எனும் தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டாம் நாள் கருத்தரங்கில் நான் பங்கேற்று உரையாற்றினேன். 40 நிமிடங்கள் இணையவழியில் உரையாற்றினேன். அதில் 40 நொடிகள் மட்டுமே என்னுடைய உரையை துண்டித்து நான் ஒட்டுமொத்தமாக தாய்குலத்தை இழிவு செய்த செய்கிறேன் என்று எனக்கு எதிராக அவதூறு பரப்புரையை சனாதன கும்பல் பரப்பி வருகிறது.

அந்த நாற்பது நிமிட உரையை முழுமையாக பெண்கள் கேட்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன். 1920 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் இந்த மனுநூலை எரித்தார்கள். 1,927 டிசம்பர் 25 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்த மனு நூலை எரித்தார். அவர்கள் வழியில்தான் என்று விடுதலை சிறுத்தைகள் குரல் கொடுத்து மனுநூலை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் தாய்குலத்தை பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறோம் என்று அரசியல் ஆதாயத்திற்காக சனாதன வெறிபிடித்த கும்பல் என் மீது அபாண்டமான பழி சுமத்துகிறார்கள். என் மீதான பழியைத் துடைக்கும் போராட்டம் அல்ல, இந்த போராட்டம். மகளிர் குலத்தின் மீதான இழிவை துடைக்கும் போராட்டம் இந்த போராட்டம். நூறாண்டுகளுக்குப் பின்னர் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். பெரியார் தொடங்கிய தொடங்கி வைத்த போராட்டத்தை, புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கி வைத்த போராட்டத்தை நூறு ஆண்டுகளுக்குப் பின்பு நாங்கள் நடத்துகின்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.

Categories

Tech |