Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களும் இப்படி செய்யலாமா… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் காவல்துறையினருக்கு அச்சல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அச்சல்வாடி பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சாலம்மாள், சீனிவாசன், சக்திவேல், பழனி, பழனியம்மாள்  ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 322 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |