Categories
மாநில செய்திகள்

லடாக் எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி… முதல்வர்..!

சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர்.

1975க்கு பிறகு சீனாவுடன் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். 3 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளார். தமிழக வீரரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, லடாக் பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன ஊடகம் தகவல்தெரிவித்துள்ளது. தற்போது எல்லையில் பதற்றத்தை தவிர்க்க இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீன எல்லையில் உருவாகி உள்ள அசாதாரண சூழல் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், தமிழக வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |