தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.. அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. அதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.