லாரி மீது கார் மோதி 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக சுமதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தை மற்றும் தாயுடன் கும்பகோணத்தில் இருக்கும் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு கரூர் வழியாக திருப்பூருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தேசிய நெடுஞ்சாலையில் ஏமூர் பகுதி ரயில்வே மேம்பாலத்தின் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமதி உள்பட 4 பேரும் லேசான காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.