குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் ,நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’ . இந்த படத்தை வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ,அதிதி பாலன், அமலாபால் ,சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ் ,வருண், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Fantastic experience worked with Director #Nalankumaraswamy sir & @VelsFilmIntl ,
Here is an interesting Sneak Peek from #KuttyStory !👉https://t.co/KmjtFkejaC#KuttyStoryIn4Days @AditiBalan @IshariKGanesh @menongautham @vp_offl #DirectorVijay @shammysaga
— VijaySethupathi (@VijaySethuOffl) February 8, 2021
சில நாட்களுக்கு முன் வெளியான குட்டி ஸ்டோரி படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்நிலையில் குட்டி ஸ்டோரி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .