தேமுதிக குட்ட குட்ட குனியமாட்டோம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு கூட்டம் தேமுதிக தலைமை அலுவலத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை நடைபெற்றது. இதில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா உட்பட முன்னனில் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தொண்டர்களிடம் பிரேமலதா, கேப்டனை பொருத்தவரைக்கும் தொண்டர்கள் விருப்பத்திற்காக ஒரு கூட்டணி அமைத்து கூட்டணி தர்மத்தை காப்பாறினோம்.
கூட்டணி தர்மத்தை காக்கும் ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்பது எல்லாருக்கும் தெரியும்.துளசி கூட வாசம் மாறினாலும் மாறும் எற்றைக்கும் தவசி வாசம் மாறாது.கூட்டணி கட்சி என்பதற்காக குட்ட குட்ட குனியமாட்டோம் . இது குட்டு வாங்குற ஜாதியில்லை , நிமிர்ந்து எழுந்து நிச்சயமாக நிற்கின்ற மிகப்பெரிய இளைஞர்கள் சக்தி என்று அவர் தெரிவித்தார்.