குற்ற வழக்குகளில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் வாய்மேடு அருகே தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகன் வைத்தியநாதன் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் வாய்மேடு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் 11 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராமமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.