Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘குதிரையோடு ஓட்டப்பந்தயத்தில்’….’போட்டிபோடும் தல தோனி’ …! வைரலான வீடியோ …!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர்  வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உற்சாகமாக  பொழுதை கழித்து வருகிறார்.

இந்த நிலையில் தோனி அவரது வீட்டில் வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சியை அவரது மனைவி சாக்ஷி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் தோனியை காண முடியாமல் தவித்து வந்த ரசிகர்கள் அவர் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீடியோவை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |