Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மதிய உணவுக்கு ஏற்ற “குஷ்கா”

தேவையான பொருட்கள்

  • அரிசி                                             – 1/2 கிலோ
  • பல்லாரி                                       – 2
  • தேங்காய்                                    – 1
  • பிரியாணி இலை                    – 4
  • நெய்  ன்                                       – 8 தேக்கரண்டி
  • ஏலக்காய்                                   – 6
  • இஞ்சி பூண்டு விழுது           – 2 தேக்கரண்டி
  • பட்டை                                        – 2
  • புதினா                                         – சிறிதளவு
  • கறிவேப்பிலை                       – சிறிதளவு
  • தயிர்                                            – 6 தேக்கரண்டி
  • கொத்தமல்லி                         – சிறிதளவு
  • எண்ணெய்                               – தேவைக்கேற்ப
  • உப்பு                                             – தேவைக்கேற்ப
  • ஏலக்காய்                                  – 6

செய்முறை

அரிசியை முதலில் நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

தேங்காயைத் துருவி பட்டுப் போன்று அரைத்து இரண்டுமுறை பால் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

அவற்றுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் தயிரை ஊற்றி  ஒரு கிளறு கிளறி அதனுடன் தேங்காய் பாலை சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடிவிடவும்.

5லிருந்து 6 விசில் வரும் வரை வேகவிட்டு பின்னர் சாதத்தை கிளறி இறக்கி விடவும்.

இப்பொது சுவைமிக்க குஷ்கா தயார்

Categories

Tech |