Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

2022-ஆம் வருடம் மார்ச் மாதம் வரை இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலை இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக உணவு பற்றாக்குறையை போக்க ரேஷன் கடைகள் மூலம் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து மாநில அரசை தொடர்ந்து மத்திய அரசு பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்கள் மே மாதம் முதல் ஜூலை வரை தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் 80.89 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் அடைந்தனர். அதன்பின் தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீடித்தது. அதனால் மத்திய அரசின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் தொடர்ந்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த பாதிப்பாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது.

இதன் காரணமாக மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று மேலும் தீவிரம் அடைந்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் 2022-ஆம் வருடம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் அரிசி உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |