Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்ச 6 மாதங்கள் பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் கண்க்கிடுவதற்கு அதிகபட்ச தொகையாக ரூபாய் 7000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி மாநில அரசில் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு பி, சி ஊழியர்கள் மற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிவு பி, சி ஊழியர்களுக்கு 6,908 ரூபாய் போனஸும், முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு 1,184 ரூபாய் போனஸும் வழங்கப்படும். மேலும் இந்த தகவலை நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |