Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் ….!!

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Categories

Tech |