Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குறட்டை பிரச்சனையை சரி செய்ய தனி சிகிச்சை பிரிவு தொடக்கம் ….!!

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சினையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் திரு. சங்குமணி தொடங்கி வைத்தார். இந்த இயந்திரம் மூலம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தில் குறைவாக செல்லக்கூடிய ஆக்சிஜன் இதயம், நுரையீரல் கோளாறுகள் மற்றும் ரத்த அழுத்தம் அனைத்தையும் கண்டறியலாம்.

இதில் முக்கியமாக குறட்டைக்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல சிகிச்சை வழங்கப்படும். இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்யப்படும். இதேபோன்று உடல் பருமன் உள்ளவர்கள் இந்த தூக்க ஆய்வக பரிசோதனை மூலமாக பயன் பெறலாம்.

Categories

Tech |