Categories
பல்சுவை மாநில செய்திகள்

குறைந்த வட்டியில் ஈசியா நகைக்கடன் வாங்கணுமா?…. இது உங்களுக்கான பதிவு தான்….!!!!

நகை கடன் என்பது இன்றைய சூழலில் அவசர தேவைக்கு பலரால் பயன்படுத்தப்படும் கடனாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு கடையில் வைப்பதைவிட வங்கியில் வைத்து குறைந்த வட்டியில் பணம் பெற்று அதற்கான வட்டியை எளிதாக கட்டி சீக்கிரமாக நகையை மீட்பதற்கு சிறந்தது என்று பொதுமக்கள் எனக்கு ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கியில் நகை கடன் என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருப்பது பொது மக்களுக்கு உதவியாக இருக்கிறது.

அதன் அடிப்படையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நகைக்கடன் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வருடத்திற்கு 7% வட்டியில் நகை கடன் வழங்கப்படுகிறது. பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு நகை கடன் இந்த வங்கியில் நடைமுறையில் உள்ளது. இதில் வட்டி மிகவும் குறைவு இந்த கடனை பெற நகைகளை நேரடியாக வங்கிக்கு எடுத்துச் சென்று எடை விவரங்களை கணக்கிடவேண்டும். கூடவே மாதம் இஎம்ஐ விதிமுறைகள் பற்றியும் தெளிவாக கேட்டுக் கொண்ட பின்னர், உங்களுடைய நகையை வைத்து அதற்கு ஏற்ற பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தங்கத்தின் மதிப்பில் 75% வரை தங்களுக்கு கடனாக தரப்படுகிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறது. எனவே நகைக்கடணில் 1 கிராமுக்கு வழங்கப்படும் தொகையும் அன்றைய விலை நிலவரத்தை பொறுத்து மாறுபடலாம். இந்த நகைகடனில் தங்கத்தின் எடையை மட்டுமே கடனுக்கு கணக்கில் எடுக்கப்படும். கல்லின் மதிப்பு சேர்க்கப்படாது.

மேலும் 18 வயது முதல் 70 வயது வரை சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருத்தல் வேண்டும். மேலும் தங்கத்தின் தூய்மை கட்டாயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். குறைந்தபட்சம் 18 கேரட் தங்கத்தில் இருந்து அதிகபட்சம் 50 கிராம் வரை நாணயங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட் இதில் ஏதாவது இரண்டு இருக்க வேண்டும். இந்த நகை கடனுக்கான வட்டியை ஆன்லைனில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு;   https://www.iob.in/jwellz-loan.aspx
என்ற தளத்தில் சென்று பார்க்கலாம்.

Categories

Tech |