Categories
உலக செய்திகள்

குறைந்த விலையிலான கொரோனா மருந்து…ஜைடஸ் கடிலா அறிமுகம்…!!!

குறைந்த விலையிலான ரெம்டெசிவிர் மருந்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு உதவ கூடிய  ரெம்டெசிவர் ஆண்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு  மருந்தை இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஜைடஸ் கடிலா தயாரித்திருக்கிறது. 100 எம்ஜி ரெம்டெசிவர் மருந்தின் விலை ரூ 2,800 என்று  நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஜைடஸ் கடிலா கூறியுள்ளது. ரெம்டெக் என்ற பிராண்ட் பெயரில் மருந்து விற்பனை செய்யப்படும் எனவும்  கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை பெற்று கொள்ளலாம் என்றும்   ஜைடஸ் கடிலா அறிவித்துள்ளது. ஆண்டி வைரல் மருந்தான ரெம்டெசிவரை இந்தியாவில் நகல் செய்து அறிமுகப்படுத்தும் ஐந்தாவது நிறுவனம் ஜைடஸ் கடிலா ஆகும்.
ஹெபடைடிஸ் சி வைரஸை ஒழிக்க அமெரிக்காவை சேர்ந்த கிளியட் சயின்சஸ் நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டில் ரெம்டெசிவிர் மருந்தை கண்டறிந்தது.தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மருந்தை, கொரோனா வைரஸ் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது.
இதனை போலவே  இந்தியாவில் அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  அனுமதி அளித்ததுள்ளது.மேலும் கிளியட் சயின்சஸ் நிறுவனத்திடம் உரிய அனுமதியை  பெற்ற  5 இந்திய நிறுவனங்கள் , ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்திருக்கின்றன.

Categories

Tech |