கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். கிராம பஞ்சாயத்துகளுக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.