வீட்டின் முன்பு நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தானில் உள்ள துர்பாத் மாவட்டத்தில் ஹொசாப் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அதில் இரு குழந்தைகள் மருத்துவமனை செல்லும் முன்பாகவே வழியிலேயே இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக குண்டுவெடிப்பு நடந்த பகுதியை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.