ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கு குழிகளில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தீடிரென வெடித்ததில் 7 தாலிபான்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் தாலிபான்களின் நடைமுறைகளினால் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்டியா மாகாணத்தில் பதுங்கு குழிகளில் வெடிகுண்டுகளை தாலிபான்கள் பதுக்கி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பதுங்கு குழிகளில் உள்ள வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததில் 7 தாலிபான்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.