Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்களால் 2 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மூக்காண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, அடிதடி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூக்காண்டியை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதேப்போன்று வீரவநல்லூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கல்லிடைகுறிச்சி காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான அறிக்கையை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினர்.

Categories

Tech |