Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஹெராயின் போதை பொருள் கடத்திய வழக்கு…. 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

ஹெராயின் போதைப் பொருள் கடத்திய வழக்கில் மேலும் 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தருவைகுளம் பகுதியில் வசிக்கும் அந்தோணி முத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர், அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான் மற்றும் பாலமுருகன் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதில் பிரேம்சிங், கசாலி மரைக்காயர், அந்தோணி முத்து ஆகிய 3 பேரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மீதமுள்ள 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அன்சார் அலி, மாரிமுத்து, இம்ரான்கான் மற்றும் பாலமுருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |