பண மோசடி செய்த வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 478- ஐ ஆன்லைன் மூலமாக மோசடி செய்ததாக கோவை மாவட்டத்தில் உள்ள காடுவெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரை திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் விஜயகுமார் மீது சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஆன்லைன் மோசடி வழக்கு உள்ளது. இந்நிலையில் விஜயகுமாரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் விஜயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.