Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

3 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 19-ஆம் தேதி தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரான பாபு என்பவரின் வீட்டிற்கு காரில் சென்ற ஒரு கும்பல் அவரை கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் சுபாஷ் சந்திரபோஸ், கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ரவிக்குமார், கோபிநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Categories

Tech |