Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…தொலைபேசி தகவல் நன்மையை கொடுக்கும்..தொலை தூர பயணம் செல்விர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலைநேரம் எதிர்பாராத தனலாபம் வந்து சேரும். இன்று எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும்.

அவ்வப்போது மனதில் திடீர் குழப்பம் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். கூடுமானவரை மற்றவர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்காமல் இருப்பது தான் நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு  காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீளம் நிறம்

Categories

Tech |