Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு..மதிப்பும், மரியாதையும் உயரும்.. எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று மதிப்பும், மரியாதையும் உயரும் நாளாகவே தான் இருக்கும் .மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்.  இன்று முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன்,  அவர்களால் நன்மையும் ஏற்படும்.

அடுத்தவரைப் பற்றி எந்தவித பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். பணம் கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள், நீங்களும் கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளையும் யாருக்கும் கொடுக்காதீர்கள். பஞ்சாயத்துகளில் தலையிட வேண்டாம்.

ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். புதிய வியாபாரம் இப்போது புதிய முயற்சிகளிலும் இப்போதைக்கு எதுவும் ஈடுபட வேண்டாம். இன்று  தேவையான பணம் உங்களிடம் வந்து சேரும் கவலை வேண்டாம்.

இன்று  மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். சந்தேகம் இருப்பினும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ,அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் :1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |