Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. மனதில் உற்சாகம் பிறக்கும்.. முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாகவே இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும்.

அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்களிடம் சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளுவது நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |