கும்பம் ராசி அன்பர்களே, இன்று நவீன வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். நல்லவிதமாக வருமானங்கள் உங்களுக்கு கூடும், அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் மூலம் நன்மை ஏற்படும்.
பணவரவும் நல்லபடியாகவே இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். மன அமைதியும் ஏற்படும், இன்று அன்பு தொல்லைக்கு ஆளாக கூடும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல தகவல் இன்று வந்து சேரும். இன்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மனம் நிம்மதியாக இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள்.
அனைத்து விஷயத்திலும் அதே போல செய்யும் செயல்களில் கூட ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள் மாணவச் செல்வங்கள் இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், விளையாடிவிட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முக்கியமாக முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்