கும்பம் ராசி அன்பர்களே.! விட்டுக்கொடுத்து சென்றால் உயர்வான சூழல் ஏற்படும்.
இன்று உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணை புரியும் நாளாக இருக்கும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பால்ய நண்பர்கள் கூட உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுப்பார்கள். நிறைய பிரச்சனைகளுக்கு இன்று நல்ல முடிவை கொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி விடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேற்றம் அடையக்கூடும். எண்ணங்களும் நல்ல சிந்தனையும் இருக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் மென்மேலும் உயர்வான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.
கடன் பிரச்சனைகளை நினைத்து கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். படிப்படியாக முன்னேறி செல்வீர்கள். மாணவர்களுக்கு தாராள மனது இருக்கும். பெற்றோர்களை மதித்து நடக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் கல்வியிலும் உங்களால் சாதித்து வெற்றி பெறமுடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்